தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு போலியோ தடுப்பு மருந்து, மூளைக் காய்ச்சலை தடுக்கக்கூடிய மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற உள்ளது.
மாவட்டங்களில் உள்ள சுகாதார அலுவலகங்களில் இன்று முதல் மே 18-ஆம் தேதி வரையும், சென்னை சூளையில் உள்ள தமிழ்நாடு ஹஜ் சர்வீஸ் சொசைட்டி அலுவலகத்தில் நாளை மறுநாள் முதல் மே 20-ஆம் தேதி வரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.