தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதிலும் சமூக ஏற்றத்தாழ்வுகளும் சாதிய அடக்குமுறைகளும் இருப்பதாக இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.
அமீர் நடித்த உயிர் தமிழுக்கு திரைப்படத்தைப் பாளையங்கோட்டை திரையரங்கில் பார்த்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜாதி ரீதியான ஒடுக்குமுறை இல்லை என்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்றும் கூறுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.