தருமபுரி மாவட்டம் அரூர் அருகே பட்டியலின சமூதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு முடித்திருத்தம் செய்ய முடியாது என்று கூறியதாக எழுந்த புகாரில் கடையின் உரிமையாளரான தந்தை, மகனை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
கீரைப்பட்டி கிராமத்தில் சலூன் கடை நடத்தி வரும் யோகேஸ்வரன் மற்றும் இவரது தந்தை கருப்பன் ஆகியோர் தங்களுக்கு முடிவெட்ட மறுத்ததாக கெளாப்பாறை அம்பேத்கர் நகரை சேர்ந்த இளைஞர்கள் அளித்த புகாரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.