விருதுநகர் அருகே செட்டிபட்டி, மருளூத்து, கல்மார்பட்டி, சூலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கர் பரப்பளவில் சுமார் 40 ஆண்டுகளாக இருந்து வருவதாகக் கூறப்படும் கொடுக்காய்ப்புளி எனப்படும் கொடிக்காய் மரங்கள் காற்றுடன் பெய்த கன மழையால் வேரொடு சாய்ந்தும், முறிந்தும் விழுந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.
ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 4 மாதங்களும் கொடுக்காய்ப்புளி சீசன் என்ற நிலையில், மரங்கள் சாய்ந்ததால் இழப்பு ஏற்பட்டுள்ளதாவும், வாழை, வேம்பு, பருத்தி உள்ளிட்டவையும் மழையின் போது வீசிய பலத்த காற்றில் சாய்ந்துள்ளதாகவும் விவசாயிகள் கூறினர்