கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.
தஞ்சை மாவட்டம் வல்லத்தைச் சேர்ந்த ரேகா தனது உறவினர்கள் 8 பேருடன் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்ற போது, அவர்கள் பயணித்த கார் நேற்று இரவு எழுத்தூரில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழந்தது.
இதில், காரில் பயணித்த இந்துமதி, ரேகாவின் 13 வயது மகள் நந்தனா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கார் ஓட்டுநர் பிரவீன் குமார் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.