விருதுநகர் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பான வழிகளில் விதிகளை மீறி பட்டாசு உற்பத்தியில் ஈடுபடும் உரிமதாரர்கள், உடந்தையாக இருக்கும் போர்மேன் ஆகியோர் மீது குற்ற வழக்குகள் மற்றும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சிர் எச்சரித்துள்ளார்.
பட்டாசு ஆலைகளை அனுமதியின்றி உள்வாடகை, உள்குத்தகை விட்டால், கூடுதலாக இரசாயணங்கள் மற்றும் தொழிலாளர்களை பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, சிவகாசி அருகே செங்கமலபட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தது தொடர்பாக, மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் மற்றும் குத்தகைதாரர் முத்துக்கிருஷ்ணன் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.