சென்னை திருவான்மியூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்மணி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பக்கத்து வீட்டில் மது அருந்தி கும்மாளமிட்ட 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்
திருவான்மியூர் ரங்கநாதன்புரம் பகுதியை சேர்ந்த பொன்னி என்ற 56 வயது பெண்மணி வீட்டில் கழுத்தருக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.
அவரது மருமகன் அய்யப்பன் என்பவர் இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
சில மாதங்களுக்கு முன்பு பொன்னியின் மகள் கோபித்துக் கொண்டு தனியாக சென்று விட்ட நிலையில் மாமியார் மருமகன் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில் இந்த கொலை சம்பவம் நடந்திருப்பதால் கொலை தொடர்பாக மகளிடம் விசாரித்தனர் எந்த துப்பும் துலங்கவில்லை.
இதற்கிடையே பக்கத்துவீட்டில் சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த அருள் மணி என்ற இளைஞரை பிடித்து விசாரித்த போது பொன்னி மரணத்துக்கான மர்மம் விலகியது.
போதைக்கு அடிமையான அருள்மணி , வீட்டில் பெற்றோர் இல்லாத நேரங்களில் கூட்டாளிகளையும் சில பெண்களையும் அழைத்து வந்து மது அருந்திவிட்டு கும்மாளமிடுவதை வாடிக்கையாக வைத்திருந்ததாகவும், இதனை கண்டித்த பொன்னி இவர்களின் போதை ஆட்டம் குறித்து அருள் மணியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
தன்னை காட்டிக் கொடுத்து விட்டதால் பொன்னியின் மீது ஆத்திரத்தில் இருந்த அருள் மணி சம்பவத்தன்று தனது கூட்டாளிகள் விக்னேஷ், தினகரன் ஆகியோரை அழைத்துக் ச்சென்று வீட்டில் தனியாக இருந்த பொன்னியை கழுத்தை அருத்து கொலை செய்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அருள் மணி உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.