நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் கொலை தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வரும் போலீசார், கரைசுத்துப்புதூரில் உள்ள அவரது வீட்டு கிணற்றில் இருந்த தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றியுள்ளனர்.
ஜெயக்குமாரின் செல்போன் கிணற்றுக்குள் வீசப்பட்டிருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில் நீர்மூழ்கி மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி இரவு முழுவதும் நடைபெற்றது. கிணற்றின் அடிப்பகுதியில் சேறும் சகதியுமாக இருப்பதால், அதன் உள்ளே ஏதும் தடயங்கள் கிடைக்குமா என்று ஆய்வு செய்ய உள்ளனர்.
ஜெயக்குமாரின் மூத்த மகன் கருத்தையா ஜெப்ரினிடம் தனி அறையில் வைத்து நேற்று விசாரணை நடத்திய போலீசார், தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.