புதுக்கோட்டையில் நகைக் கடை வீதியில் உள்ள லிங்கேஸ்வரர் நகைக்கடையில் சோதனை நடத்திய ஹால்மார்க் தங்கத் தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள், ஹால்மார்க் முத்திரை அல்லாத, கணக்கில் வராத தரம் குறைந்த தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
நகைக்கடையில் இருந்த தங்க நகை அளவிடும் தராசு கம்ப்யூட்டரையும் அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.