தருமபுரி மாவட்டத்தில் முக்கல்நாயக்கன்பட்டி, நடுப்பட்டி, கோடியூர், கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் மூவாயிரம் ஏக்கருக்கு மேல் பயிடப்பட்டுள்ள வெள்ளை மற்றும் கருப்பு வெற்றிலைக் கொடிக்கால்கள் அனல் காற்று மற்றும் தண்ணீர்ப் பற்றாக்குறையால் கருகி வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
மழை பெய்யாமல் கருகிவிட்டால் மீண்டும் இதே போன்று வெற்றிலைக் கொடிக்கால்களை உருவாக்க 3 மாதங்கள் ஆகும் என்றும் இதுவரை கருகியுள்ள வெற்றிலையை கணக்கிட்டு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வெற்றிலை விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.