திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கரைப்புதூர் ஊராட்சியில் குடிநீர் குழாய் அமைத்ததில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டும் ஊர்மக்கள், 25 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாகவும் வீட்டு உபயோகத்திற்கு வழங்கப்படும் தண்ணீர் முறையாக வழங்கப்படுவதில்லை எனவும் கூறினர்.
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஒரு குடிநீர் குழாய் மட்டுமே அமைக்க அனுமதி அளித்துவிட்டு, 8000 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுக்கொண்டு நான்கு குடிநீர் குழாய்கள் முறைகேடாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து கேட்டபோது, உரிய ஆய்வு செய்து அடுக்குமாடி குடியிருப்புகளின்கூடுதல் இணைப்புகள் துண்டிக்கப்படும் என ஊராட்சி மன்றத் தலைவர் தெரிவித்தார்.