தமிழ்நாடு காவல்துறையின் முக அடையாளம் கண்டறியும் இணையதள பக்கம், வலேரி என்ற பெயருள்ள ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த இணையதளத்தில், குற்றவாளிகள், காணாமல் போனவர்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய பல நபர்கள் குறித்த தரவுகள் அனைத்தும் பதிவேற்றப்பட்டுள்ளன.
முதல் தகவல் அறிக்கைகள், அதில் சம்பந்தப்பட்டவர்களின் விவரங்கள் மற்றும் 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்களின் விவரங்களும் இதில் உள்ளன.
இணையதளம் முடக்கப்பட்டாலும், தரவுகளை யாரும் திருட முடியாது என்று டிஜிபி சங்கர் ஜிவால் கூறியுள்ளார் தடுப்பு நடவடிக்கையாக, இணையதள நிர்வாகி கணக்கு தற்காலிகமாக நீக்கப்பட்டது.