சென்னை முழுவதும் 64 இடங்களில் விதிகளை மீறி, வாகன பதிவு எண் தகட்டில் போலீஸ் என, ஸ்டிக்கர் ஒட்டியிருந்த, 421 வாகன ஓட்டிகளுக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் தற்போது பிடிபட்டவர்கள் மட்டுமல்ல, வேறு யாராக இருந்தாலும், வாகன பதிவு எண் தகட்டில், தேவையற்ற எந்த ஸ்டிக்கரையும் ஒட்டக்கூடாது என்றும் அந்த தகட்டில், பதிவு எண்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.