நாமக்கல் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஹோட்டலில் வாங்கப்பட்ட சிக்கன் ரைஸ் சாப்பிட்டதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட 67 வயது சண்முகம் என்பவர் உயிரிழந்தார்.
கல்லூரி மாணவர் பகவதி என்பவர் ஹோட்டலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு விட்டு பார்சல் வாங்கிச் சென்று குடும்பத்தினருக்கு கொடுத்த நிலையில், அவரது தாய் நதியா, தாத்தா சண்முகம் உடல்நலம் பாதிக்கப்பட்டதும் மற்றவர்கள் சிக்கன் ரைஸ் சாப்பிடாமல் தவிர்த்தனர்.
மாவட்ட ஆட்சியர் உமா, உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஹோட்டலில் ஆய்வு செய்து சீல் வைத்த நிலையில், சேலத்தில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ள சிக்கன் ரைஸ் குறித்த ஆய்வறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.
சிக்கன் ரைசை ஹோட்டலிலேயே சாப்பிட்ட பகவதிக்கு ஏதும் ஆகாததால் பார்சல் உணவில் கலப்படம் நடந்ததா என்ற கோணத்திலும் விசாரிக்கின்றன