தரங்கம்பாடியில் அருகருகே சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மற்றொரு டூவீலர் இடித்ததால் நிலைத்தடுமாறி கீழே விழுந்த டூவீலரில் சென்ற 3 பேர் மீது டிராக்டர் ஏறி தலை நசுங்கி உயிரிழந்தனர்.
கடலூரை சேர்ந்த முகமது ஷக்கிம், ஹரி மற்றும் ஆகாஷ் ஆகியோர் நாகப்பட்டினத்திற்கு சென்றுவிட்டு ஹெல்மெட் அணியாமல் கடலூரை நோக்கி திரும்பி வந்தபோது, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே விபத்தில் சிக்கினர்.
ஸ்ரீதர் என்பவர் வந்த இருசக்கர வாகனம், இவர்களின் டூவீலர் மீது இடித்ததால் சாலையில் விழுந்த 3 பேர் மீதும் டிராக்டர் ஏறியதாக கூறப்படுகிறது.