பட்டாஸ் படத்தில் தனுஷுடன் ஜோடியாக நடித்துள்ள, நடிகை மெக்ரீன் தனது கருமுட்டைகளை எடுத்து உறையவைத்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் .
நயன்தாரா பாணியில் கருமுட்டையை உறைய வைத்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு
பட்டாஸ், நெஞ்சிலே துணிவிருந்தால் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்திருப்பவர் மெக்ரீன், இவர் தனக்கு எப்போது திருமணம் என்று இதுவரை முடிவு செய்யாததால், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தனது கருமுட்டைகளை உறைய வைத்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்
ரெம்மி என்ற மருத்துவரின் ஆலோசனையின் பேரில் கருமுட்டையை உறைய வைப்பதற்காக 16 நாட்களில் 30 முறை ஊசிகள் மூலம் அடிவயிற்றில் மருந்துகள் செலுத்திக்கொண்டதாக தெரிவித்துள்ள மெக்ரீன், இறுதியாக தன்னிடம் இருந்து 10க்கும் மேற்பட்ட கருமுட்டைகளை எடுத்து பாதுக்காப்பாக வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்
இந்த சிகிச்சை முறை விவரித்த மகப்பேறு மருத்துவர் ஜாஸ்மின் திலக், இது ஒரு நவீன மருத்துவ முறை என்றும் பெண்களிடம் இருந்து எடுக்கப்படும் உறைய வைக்கப்பட்ட கருமுட்டைகளை சிறு குப்பியில் அடைத்து திரவ நைட்ரஜனில் வைத்து பலவருடங்கள் பாதுகாக்க முடியும் என்றார்
இதற்கு முன்பு நடிகைகள் பிரியங்கா சோப்ரா, நயன்தாரா ஆகியோர் திருமணத்துக்கு பல வருடங்களுக்கு முன்பே தங்களது கருமுட்டைகளை உறைய வைத்து தங்களுக்கு திருமணமானவுடன் ஐ.வி.எப் சிகிச்சை மூலம் குழந்தைகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
கர்ப்பம் தரிக்காமல் தங்கள் கருமுட்டையில் இருந்து குழந்தை பெறவும், உடல் எடை கூடாமல் தங்கள் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் நடிகைகள் இந்த வழியை தேர்ந்தெடுப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்