புவிசார் குறியீடு கிடைத்த மார்த்தாண்டம் தேனுக்கு உரிய விலை கிடைக்காததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, மாற்று தொழிலை தேடும் கசப்பான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக தேன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.
தேனி வளர்போர் கூட்டுறவு சங்கம் சார்பில் கிலோ 150 ரூபாய்க்கு தேன் கொள்முதல் செய்யப்படும் போதும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து தேனையும் கொள்முதல் செய்வதில்லை என கூறப்படுகிறது. கார்பரேட் நிறுவனங்களின் போட்டியால் தனியாரிடம் கிலோ 70 ரூபாய்க்கு தேன் விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.