திருச்சி குண்டூரில் 8 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள், 30 குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரௌடி வெள்ளைக்காளி என்பவனுக்கு டி.எஸ்.பி தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த வெள்ளைக்காளி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். 15 நாள் பரோலில் திருச்சியிலுள்ள சகோதரியின் வீட்டுக்கு வந்துள்ள வெள்ளைக்காளியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.