திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அவரப்பாளையம் கிராமத்தில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவிலில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பொங்கல் விழா விமரிசையாகத் தொடங்கியது.
நூறு ஆண்டுகள் கடந்தும் முன்னோர்கள் வழியில், கொங்கு வேளாளர் கவுண்டர் மற்றும் பட்டியலின மக்கள் இணைந்து பொங்கல் விழாவைக் கொண்டாடுகின்றனர்.