கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்க உள்ளதால், ஓசூர் பகுதிகளில் இயங்கி வரும் தனியார் பள்ளி பேருந்துகளில் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
பள்ளி பேருந்துகளில் உள்ள கண்காணிப்பு கேமரா, முதலுதவி பெட்டிகள், ஜிபிஎஸ் கருவிகள் மற்றும் இருக்கைகள் முறையாக பராமரிக்கப்பட்டு உள்ளனவா என்று ஆய்வு செய்யப்பட்டது.