தேனி மாவட்டம் போடியில் கடும் வெயிலின் தாக்கம் மற்றும் போதிய மழை இல்லாத காரணத்தால் ஏலக்காய்ச்செடிகள் காய்ந்து, உற்பத்தி குறைந்ததால் விலை உயர்ந்து வருவது இருப்பு வைத்திருந்த வர்த்தகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக 900 ரூபாய்க்கு விற்ற ஏலக்காய் படிப்படியாக உயர்ந்தது, சுமாரான ஏலக்காய் கிலோ ஒன்றுக்கு 2000 ரூபாய் வரையும், தரம் பிரிக்கப்பட்ட முதல் தர ஏலக்காய் ரூபாய் 3000 வரையிலும் தற்போது விற்கப்படுகின்றது