திருப்பூர் மாவட்டம் பல்லடம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் ரங்கசமுத்திரம் கிராமத்தில் எலந்தகுட்டை ஏரியில் மூட்டை மூட்டையாக மருத்துவ கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டிச் சென்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
சுற்றுவட்டார மக்களின் நிலத்தடி நீர்த் தேவைக்காக தன்னார்வலர்களோடு இணைந்து பொதுமக்களே சுத்தம் செய்து பராமரித்து வந்த ஏரியில், சிசிடிவி கேமிராக்களை பொறுத்தி கண்காணிக்க வேண்டும் என அப்பகுதியினர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.