மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவில் விடிய விடிய நடைபெற்ற தசாவதார நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமன அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம் , மோகினி அவதாரம் என அடுத்தடுத்து நடைபெற்ற அலங்காரங்களை பக்தர்கள் கண்டு வழிபட்டனர்.
இதைத் தொடர்ந்து கள்ளழகருக்கு திருமஞ்சனம் நடைபெற்று அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க கோலத்தில் எழுத்தருள, இன்றிரவு தல்லாகுளம் சேதுபதி மன்னர் மண்டபத்தை அடைகிறார். அங்கு பூப்பல்லக்கு நடைபெறவுள்ளது.