கேரளாவின் ஆலப்புழா அருகே கிராமங்களில் கோழிப்பண்ணைகளில் வாத்துகள் அடுத்தடுத்து உயிரிழந்ததால் பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழக எல்லையில் 26 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் புளியரை மற்றும் மேக்கரை பகுதிகளில் கோழி ஏற்றி வரும் வாகனங்கள் தூய்மையாக உள்ளதா என கால்நடை பராமரிப்புத் துறையினர் சோதித்து அனுமதித்து வருகின்றனர்.