கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு நந்தீஸ்வரமங்கலம் கிராமத்தில் குளத்தில் விளையாட இறங்கிய அண்ணன், தம்பி இருவரும் ஆழமான பகுதியில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கடலூரில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான பள்ளி விடுதியில் தங்கி படித்துவந்த திலீப்ராஜ், தினேஷ் இருவரும் கோடை விடுமுறையை கழிக்க பாட்டி வீட்டிற்கு வந்திருந்த நிலையில் நடந்த இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.