தேர்தல் பிரசாரம் முடிந்ததால் வெளியூரைச் சேர்ந்தவர்கள் வெளியேற கோவை ஆட்சியர் கிராந்திகுமார் உத்தரவிட்டார். தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், திருமண மண்டபங்களில் போலீசார் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறிய அவர், வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டருக்கு உள்ளே அரசியல் கட்சியினரின் பூத் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.