மாமல்லபுரத்தில் அமைச்சர் தாமோ அன்பரசனுடன் வாக்கு சேகரிக்க சென்ற காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் செல்வம், ஏற்கனவே செதுக்கப்பட்ட வள்ளுவர் சிலையை உளியால் செதுக்குவது போல போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.
அதனை பார்த்து அசந்து போன அமைச்சர் தாமோ. அன்பரசன், யோவ் நல்லா நடிக்கிறான்யா என்று கலாய்த்தார்
அத்தோடு விடாமல் அமைச்சரின் கையிலும் உளியை கொடுக்க அவரும் செதுக்குவது போல நடித்தார்
இருவரது நடிப்பையும் பாராட்டி ஆளுக்கொரு நினைவுபரிசு கொடுத்து அனுப்பி வைத்தனர்