திருப்பத்தூர் அடுத்த விஷமங்கலம், மட்றப்பள்ளி, பசலிக்குட்டை, அனேரி, ராச்சமங்களம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன்கூட்டணி கட்சியினருடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
விஷமங்கலத்தில் அமமுக நிர்வாகி ஒருவர், கூட்டணி கட்சியான தங்களை பிரச்சாரத்துக்கு முறையாக அழைப்பதில்லை, தங்கள் கட்சியின் கொடிகளை புறக்கணிக்கிறார்கள் என அஸ்வத்தாமனுடன் வாக்குவாதம் செய்தார்.
நீண்ட நேரம் போராடி அஸ்வத்தாமன் அவரை சமாதானம் செய்தார்.
தொடர்ந்து ஏ.கே மேட்டூரில் ஏர் கலப்பை பிடித்து நிலத்தை உழுது அஸ்வத்தாமன்வாக்கு சேகரித்தார்.