நீங்கள் அடிக்கடி தொகுதி பக்கமே வருவதில்லை என்று புகார் கூறிய இளைஞர்களிடம், ஒரு எம்.பி.யால் தொகுதியில் உள்ள எல்லோரையும் பார்க்க முடியாது என சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
தொகுதி பிரச்னைகளை பார்லிமெண்டில் பேசுவதற்குத்தான் நீங்கள் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்றும், அதன்படி மக்கள் குறைகளை பார்லிமென்ட்டில் பல முறை தான் பேசியிருப்பதாகவும் அவர் கூறினார்.
இதுவரை மனசாட்சிப்படி பணியாற்றி இருப்பதாகவும், எந்த நிகழ்ச்சிக்கு அழைத்தாலும் அவசியம் வருவேன் என்றும், இளைஞர்களிடம் அன்பாகப் பேசி கார்த்தி சிதம்பரம் வாக்கு சேகரித்தார்.