கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரக் கூட்ட மேடையில் வேட்பாளர் வித்யாராணி வீரப்பனை அறிமுகம் செய்துவைத்த சீமான், வாக்களிப்பது குறித்து பாடல் ஒன்றை ரசித்துப் பாடத் தொடங்கினார்.
அப்போது திடீரென மேடையேறிய இளைஞர் ஒருவர் சீமானின் இடுப்பை வளைத்துப் பிடித்தவாறு செல்பி எடுக்க முயன்றார்.
இதனை சற்றும் எதிர்பாராத சீமான், பாடுவதை நிறுத்திவிட்டு, இளைஞரின் கையிலிருந்த செல்போனை பிடுங்கினார். உடனே சீமானின் இடதுகையை பின்பக்கமாக வளைத்துப் பிடித்த அந்த இளைஞர், "அண்ணே ஒரேயொரு செல்பி அண்ணே" என்றார்.
கடுப்பான சீமான் செல்போனை தூக்கி வீசிவிட்டு அந்த இளைஞரை கடிந்துகொண்டார். உடனடியாக மேடைக்கு ஓடி வந்த சீமானின் மெய்க்காப்பாளர்கள், அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து கீழே இழுத்துச் சென்றனர்.