நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்திய விவாத நிகழ்ச்சியில் திமுக, அதிமுக, பாஜக, கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சியினர் பங்கேற்று கருத்து தெரிவித்தனர்.
பாஜக சார்பில் பங்கேற்ற மாநில செயலாளர் சூர்யா, காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு திமுக சார்பில் அளிக்கப்பட்ட 5 வாக்குறுதிகளை படித்து அது நிறைவேற்றப்பட்டதா என கேள்வி எழுப்பினார். அப்போது அங்கிருந்த திமுகவினர் எதிர்த்து கோஷமிட்டனர்.
எம்எல்ஏ எழிலரசன் பதிலளித்து பேசிக் கொண்டிருந்த போது பாஜகவினர் எதிர் கோஷம் எழுப்பினர். அப்போது பாஜகவினரை எம்எல்ஏ ஒருமையில் பேசியதாக கூறப்படும் நிலையில் இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகளை வீசி எறிந்தனர்.
வில்லங்கம் ஏற்பட்டதால் விவாத நிகழ்ச்சி பாதியோடு முடித்துக் கொள்ளப்பட, தாக்குதல் தொடர்பாக இருதரப்பினரும் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர்.