தி.மு.க.வுக்கு வாக்களிக்காவிட்டால் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது என அக்கட்சி நிர்வாகிகள் மிரட்டுவதாக நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்மணி கூறினார்.
புதுச்சத்திரம் அருகே பிரச்சாரம் மேற்கொண்ட தமிழ்மணி, திமுகவினரின் மிரட்டலுக்கு பயப்பட வேண்டாம் எனவும், அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகையை உயர்த்தி கொடுப்பதாக எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்திருப்பதாகவும் கூறி வாக்கு சேகரித்தார்.