சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்ட கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை கரும்பத்தம்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தி.மு.க ஆட்சியில் விசைத்தறிகளை உடைத்து கிலோக்கணக்கில் இரும்புக்கடையில் விற்பனை செய்யும் அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வெற்றி பெற்றதும் முதல் வேலையாக, கோவை மாவட்டத்தின் ஜீவநதியான நொய்யல் ஆறு சுத்தப்படுத்தப்படும் என அண்ணாமலை தெரிவித்தார்.