ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க கூட்டணியின் சுயேட்சை வேட்பாளர் ஓபிஎஸ் வண்ணாங் குண்டு பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது அங்கு நின்றிருந்த ராதிகா என்ற பெண், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு பலாப்பழத்தின் மேல் உள்ள முற்களை கொண்டு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்றும் நான் 200 ரூபாய்க்காக பிரசாரத்திற்கு வந்தவள் அல்ல என்று ஓபிஎஸ்ஸிடம் தெரிவித்தார்
பலாப்பழ சின்னத்திற்கு வாக்களியுங்கள், பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவரிடம் ஓபிஎஸ் உறுதியளித்தார்