சேலம் பாராளுமன்ற திமுக வேட்பாளர் செல்வ கணபதி காட்டூர் பகுதியில் வாக்கு சேகரித்த போது , தங்கள் காலத்தில் பள்ளியில் காலை சிற்றுண்டி கிடையாது என்றும் கிச்சடி எல்லாம் நாங்கள் சாப்பிட்டதில்லை என்றும் கூறினார்.
அதற்கு மூதாட்டி ஒருவர் ஏம்பா.. நான் படிக்கும் போது பள்ளிக்கூடத்தில கூழ் ஊத்தினாங்களேப்பா” என்று கூறினார்
அப்போது அருகில் இருந்தவர் பாட்டியை அடக்க முயன்றதால் மூதாட்டி வாய் இருப்பது கேள்வி கேட்க தான் நியாயத்தை தான் கூறுகிறேன் என்றதும் நிலைமையை உணர்ந்த திமுக வேட்பாளர் செல்வகணபதி, சிரித்துக் கொண்டே மழுப்பலாக பதில் அளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்