கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சிலர் ஒருவரை மாற்றி ஒருவர் குற்றஞ்சாட்டி காரசாரமாக பேசிக் கொள்ள மற்ற நிர்வாகிகள் அவர்களை சமாதானப்படுத்தினர்.
இந்த கூட்டம் ஏன் கூட்டப்பட்டது என்பதை நிர்வாகி ஒருவர் விளக்கி கூறினார். அதில், கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்திடம் இருந்து தேர்தல் செலவிற்காக கூட்டணிக் கட்சி என்ற முறையில் மாவட்ட செயலாளர் 15 லட்சம் ரூபாய் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த பணத்தை நகர, ஒன்றிய நிர்வாகிகளுக்கு முறையாக பிரித்துக் கொடுக்கப்படாததால் வாக்கு சேகரிப்பில் தொய்வு ஏற்படுவதாக குற்றஞ்சாட்டினர்.
இதுகுறித்து தலைமையின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்ததைத் தொடர்ந்து கூட்டம் முடித்து வைக்கப்பட்டது.