கச்சத்தீவை மீட்க சர்வதேச நீதிமன்றத்தை நாடி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.
நாகை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராஜுக்கு வேதாரண்யத்தை அடுத்த வாய்மேட்டில் வாக்கு சேகரித்த ரகுபதி, கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கிய பிறகே அது ராமநாதபுரம் ராஜாவுக்கு சொந்தமானது என்ற ஆதாரங்கள் கிடைத்ததாக தெரிவித்தார்.