கடலூர் திமுக கூட்டணி வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அவர் வருவதற்கு முன்பு கூட்டத்தினரைக் கவர பேண்ட் வாத்தியங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது பேண்டு வாத்திய இசைக்கு ஏற்ப பெண்களில் சிலர் திடீரெனஆட ஆரம்பித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் சுயேட்சை வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு வந்த தொண்டர் அதிமுக துண்டை தலையில் கட்டி மது அருந்தியிருந்த உற்சாகத்தில் தாளத்திற்கு ஏற்ப பல்டி அடித்து நடனம் ஆடினார்