புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம், காமராஜ் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாகனத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது திடீரென மயங்கி விழுந்தார்.
வெயில் தாங்காமல் லேசான மயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், அருகில் இருந்த நிர்வாகி வீட்டில் ஓய்வு எடுத்தபின் அவர் மீண்டும் பிரச்சாரத்தை தொடங்கினார்.