நீலகிரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எல். முருகன், மேட்டுப்பாளையத்தில் உள்ள உருளை மற்றும் வெள்ளைப்பூண்டு மண்டிகளில் மூட்டைகளை தைத்து கொடுத்தும், தொழிலாளர்களிடம் தெலுங்கில் பேசியும் வாக்கு சேகரித்தார்.
கடந்த எழுபது ஆண்டுகளாக தமிழர்களை திமுக வஞ்சித்து வரும் நிலையில், தமிழக வளர்ச்சிக்கென பதினோரு லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கியவர் பிரதமர் மோடி தான் என்றும் எல்.முருகன் கூறினார்.
சேலம் மாவட்டம் சங்ககிரியில் நாமக்கல் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் தமிழ்மணி அறிமுகக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, காவிரியில் தண்ணீர் பெறும் உரிமையை அ.தி.மு.க பெற்றுத் தந்ததாகவும், கர்நாடகாவில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சியில் இருந்தும் தேவையான தண்ணீரை தி.மு.க.வால் பெற முடியவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
தேனி தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து வாடிப்பட்டி பகுதியில் வாக்கு சேகரித்த ஆர்.பி. உதயகுமார், தம்மை பஃபூன் என்று விமர்சித்த டி.டி.வி. தினகரனுக்கு பதிலளித்தார்.
தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் ரொவினாவை ஆதரித்து விளாத்திகுளத்தில் வாக்கு சேகரித்த சீமான், இலவசம் என்பது வளர்ச்சி திட்டம் அல்ல வீழ்ச்சி திட்டம் என கூறினார்.