பிரதமரை எதிர்த்து தமிழக அரசியல்வாதிகள் அரசியல் செய்வதால் தமிழகத்தின் முன்னேற்றம் பாதிக்கப்படுவதாக கடலூர் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார்.
கடலூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பா.ம.க. வேட்பாளர் தங்கர் பச்சான், வேலை இல்லாததால் இளைஞர்கள் போதை பழக்கத்துக்கு அடிமை ஆவதாகவும், தாம் வெற்றி பெற்றால் வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை கொடுப்பேன் எனவும் கூறினார்.