தேர்தல் ஆணைய விதிகளின்படி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் மீதான நிலுவை மற்றும் தண்டனை பெற்ற வழக்குகள் குறித்த விவரங்களை அக்கட்சி வெளியிட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது 26 வழக்குகளும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மீது 24 வழக்குகளும் உள்ளன.
அதிகபட்சமாக தஞ்சாவூர் வேட்பாளர் கருப்பு முருகானந்தம் மீது கொலை முயற்சி வழக்கு உள்பட 33 வழக்குகள் உள்ளன. தமிழிசை சௌந்தரராஜன், ராதிகா, பால்கனகராஜ் உள்பட சிலர் மீது எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.