பசுமாட்டை விட 4 மடங்கு வைட்டமன் சி உள்ளதாகக் கூறி குமரி மாவட்டத்தில் கழுதைப் பால் ஒருலிட்டர் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தை சார்ந்த இளைஞர்கள் இருவர் பத்துக்கும் மேற்பட்ட கழுதைகளை நாகர்கோவில்,தோவாளை பகுதிகளுக்கு அழைத்து வந்து கழுதை பால் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர், கழுதை பால் விலை அதிகமாக உள்ளதால் மருந்தாக அருந்துவது தான் கட்டுப்படி ஆகும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்