தனது தேர்தல் வாக்குறுதியான பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, மகளிர் சுய உதவிக்குழு கடன் ரத்து உள்ளிட்ட எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் தி.மு.க பொய் பேசி வருவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பா.ஜ.க செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர் பொய் பேசுவது, கொள்ளையடிப்பது, கட்ட பஞ்சாயத்து, ஊழல் செய்வது மற்றும் குடும்ப ஆட்சி தான் தி.மு.கவின் கொள்கையாக உள்ளதாகவும் விமர்சித்தார்.