தமிழர்களுக்காக பல மேடைகளில் முழங்கி வந்த சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் மைக் சின்னம் ஒதுக்கி உள்ளது. சீமான் சின்சியராக மைக் சின்னத்தை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தபோது, பின்னால் அமர்ந்திருந்த தம்பி ஒருவரின் செல்போனில் ரத்தகோதிப்பு.. ரத்த கொதிப்பு.. மாமனாருக்கு ரத்தகொதிப்பு என்ற பாடல் ரிங்டோனாக ஒலித்ததால் அனைவரும் திகைத்து போய் திரும்பிப்பார்த்தனர்
இருமுறை இடையில் ஒலித்த ரத்த கொதிப்பு பாடலால் இடையூறு ஏற்ப்பட்டாலும் ரத்தம் கொதிக்காமல் சாந்தமாக பேசினார் சீமான
நாம் தமிழர் வேட்பாளர்கள் தமிழ் படிக்க தெரியாமல் திணறிய சம்பவம் குறித்து எழுப்பபட்ட கேள்விக்கு, நீங்கள் தான் தூக்கில் தொங்க வேண்டும் என்று அரசாங்கத்தை சாடினார்
தனது இரு மகன்களுக்குமே தமிழ் தெரியவில்லை என்று ஒப்புக் கொண்ட சீமான் , இதற்காக தான் அவமானப்படுவதாக ஒப்புக் கொண்டார்