துபாயில் இருந்து சென்னைக்கு எமிரேட்ஸ் விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது, 2 பெண் பயணிகள், தங்களது உள்ளாடைகள் மற்றும் சூட்கேஸின் ரகசிய அறைகளில் மறைத்து 10 கிலோ தங்கம் கடத்தியது தெரியவந்தது.
அதன் சர்வதேச சந்தை மதிப்பு 7 கோடி ரூபாய் என தெரிவித்த அதிகாரிகள் 2 பெண்களையும் கைது செய்தனர்.