சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக கட்சி வேட்பாளர் தேவநாதன் வேட்புமனு தாக்கலின் போது அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் 305 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் உள்ளதாக விவரம் அளித்துள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 96 கோடியே 25 லட்சம் மதிப்பிலான சொத்து விவரங்களையும், அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் 6 கோடியே 66 லட்சம் மதிப்பிலான சொத்து விவரங்களையும் தாக்கல் செய்துள்ளனர்.