தேனி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை கட்சியினர் வெற்றி பெறச் செய்ய வில்லையென்றால் தனது அமைச்சர் பொறுப்பையும், கட்சியின் மாவட்ட செயலாளர் பதவியையும் ராஜினாமா செய்து விடுவேன் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்
நிர்வாகிகள் கூட்டத்திற்கு வெளியிலிருந்து பெண்களை அழைத்து வந்திருப்பதை சுட்டிக் காட்டி பேசிய அமைச்சர் மூர்த்தி, செல்ஃபோனில் அரசியல் செய்தால் எப்படி உருப்படும் என கேள்வி எழுப்பியதோடு பொய் சொல்வதை முதலில் நிறுத்துங்கள் எனவும் நிர்வாகிகளிடம் கடிந்து கொண்டார்