ராமநாதபுரம் தொகுதியில் பாரதீய ஜனதா ஆதரவுடன் சுயேட்சை சின்னத்தில் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடும் நிலையில், வாக்காளர்களை குழப்புவதற்காக அதே பெயருடைய வேறு ஒரு நபர் சுயேட்சையாக களமிறக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை சேர்ந்த ஒச்சப்பன் என்பவரது மகனான ஓ. பன்னீர் செல்வம் என்பவரை இராம நாதபுரம் பகுதியை சேர்ந்த 10 பேர் முன்மொழிய அவர் தனது ஆதரவாளர்களுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்
அதே நேரத்தில் ஓ.பி.எஸ்ஸோ, வாளி, பலாப்பழம், திராட்சை பழம் இவற்றில் ஒரு சின்னத்தை கேட்டிருப்பதாக வெள்ளந்தியாக கூறிக் கொண்டிருந்தார்
குறுக்கே இந்த கவுசிக் வந்தால் என்பது போல திடீர் ஓபிஎஸ் களமிறங்கி இருப்பதால், அசல் ஓபிஎஸ்ஸுக்கு விழுகின்ற வாக்குகள் பிரியும் என்றும், இந்த திடீர் வேட்பாளரான ஓ.பன்னீர் செல்வத்தை அதிமுக ஆதரவாளர்கள் களமிறக்கி இருப்பதாகவும் கூறப்படுகின்றது
2011 ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் முரசு சின்னத்தில் போட்டியிட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்தை எதிர்த்து அவரது பெயருடைய வேறு ஒரு சுயேட்சை வேட்பாளர் கூடை சின்னத்தில் போட்டியிட்டு 7 ஆயிரம் வாக்குகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.