வேலூர் தொகுதியில் கடந்த முறை இரட்டை இலைச் சின்னத்தில் நின்று தாம் தோற்றதற்கு மூல காரணமாக இருந்தவர் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர்தான் என பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அவர், கடந்த தேர்தலில் தனக்காக உழைத்த அதிமுக தொண்டர்களுக்குத் தாம் கடமைப்பட்டுள்ளதாகக் கூறினார்.
ஆனால் தனது மாப்பிள்ளை கதிர் ஆனந்த் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக திமுகவுடன் கைகோர்த்து அந்த பெரிய மனிதர் உள்ளடி வேலைகள் பார்த்தாகவும் ஏ.சி.சண்முகம் கூறினார்.